உதவிப் பொருட்கள் விநியோக மையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை உக்ரேன் தலைவர் மிகவும் பயங்கரமானது என்று வர்ணித்துள்ளார்.
தெற்கு ஜபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் உள்ள கோமிஷுவாகா கிராமத்தின் மீது, தலா 3,000 கிலோ எடையுள்ள குறைந்தது ஒன்பது வான்வழி குண்டுகள் வீசப்பட்டதில், ஐந்து பேர் காயமடைந்தனர் என்றும், ஆரம்பத்தில் 27 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது என்றும் பிராந்தியத் தலைவர் மைக்கைலோ செமிகின் கூறினார்.
ரஷ்ய ராணுவம் இது குறித்து இதுவரை பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தாக்குதலை அடுத்து ஜபோரிஜியா பிராந்தியம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (03) ஒரு துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















