சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த சூ செங்ஹாங் என்ற ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை இணையவாசிகளே ஒன்று சேர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வைத்துள்ளனர்.
சிறுகச் சிறுகப் பணம் சேமித்த இவர், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யவிருப்பதாக சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, அனைவரும் விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இளைஞரின் இந்த எளிய அழைப்பை ஏற்று, சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்தும் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர்:
பலர் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மணமக்களுக்குப் பரிசாகக் கொண்டுவந்தனர்.
திறமையான சமையல் கலைஞர்கள் எந்தவிதக் கட்டணமுமின்றி தாமாக முன்வந்து திருமணத்திற்கு இலவசமாக உணவு சமைத்துக் கொடுத்தனர்.
மேலும், சிலர் மணமக்களின் பயணத்திற்காகச் சொகுசு சிற்றுார்ந்துகளில் அணிவகுப்பை ஏற்பாடு செய்ததுடன், ஆடம்பரமான மேபேக் (Maybach) சிற்றுார்ந்தை பரிசாக வழங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலமாகத் திரண்ட மக்கள், ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தைத் தங்கள் சொந்தத் திருமணம் போல் ஏற்று நடத்தி வைத்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

















