இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 12 சீன நாட்டவர்கள், 3 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் 06 இந்திய நாட்டவர்கள் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குடிவரவு அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிச் செயல் மருதானை டெக்னிக்கல் ஜங்சன் (Technical Junction) பகுதியில் உள்ள மூன்று அடுக்குக் கட்டிடமொன்றில் நடத்தப்பட்டு வந்தது.
அந்தக் குழுவினர் ஒரு கட்டிடத்திலிருந்து நடத்திய இணைய மோசடிகளின் தன்மை குறித்தும், அந்தச் செயல்பாடுகளுக்குப் பின்னணியில் உள்ள வலைப்பின்னல் குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) ரன்மால் கொடிதுவக்குவின் வழிகாட்டலின் கீழ், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













