மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று காணால் போயிருந்த குடாவெல்லைவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பாத நான்கு (04) மீனவர்களைக் கண்டறிவதற்காக, மீன்பிடித் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இலங்கை கடற்படை, கடலோரக் காவல்ப்படை திணைக்களம், விமானப்படை மற்றும் குறித்த கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கு அறிவித்தல் வழங்கி, ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தினால் ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு, இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல கப்பலை ஈடுபடுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின்போது, காணாமல் போயிருந்த மீன்பிடிப் படகையும் அதில் பயணித்த நான்கு மீனவர்களையும் 2026 நவம்பர் 01 ஆம் திகதி, பொத்துவில் கடற்கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடலில் எவ்வித ஆபத்துமின்றி ஹேஷக புதா (IMUL-A-0658-KLT) என்ற பலநாள் மீன்பிடி படகை கண்டுபிடிக்க முடிந்தது.
இலங்கை கடற்படை ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையின் பயனாகக் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு (04) மீனவர்களும், தற்போது இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல கப்பல் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.














