ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச தொிவித்துள்ளாா்.
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”பொதுஜன பெரமுன மக்கள் ஆதரவு உள்ள பலமிக்க ஒருகட்சியாகும். கட்சித்தாவல்கள் இடம்பெற்றாலும் மக்களை மாற்ற முடியாது.
கட்சி என்ற ரீதியில் நாம் கொள்கைகளுக்கு இணங்கியே செயற்படுவோம். அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட எமது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியான தீர்மானத்தினையே மேற்கொள்வார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் ஆதரவினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு கட்சியாகும். எனவே நாட்டு மக்கள் மத்தியில் இன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பலர் செயற்படுகின்றனர்.
பொதுஜன பெரமுனவுக்குள் பாரிய பிளவு காணப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். நாம் ஒரு விடயத்தை தெரிவித்து கொள்கின்றோம். தேர்தலில் எமக்கு எவரும் சவால் அல்ல” என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச தொிவித்துள்ளாா்.