மீனவர்களை மேம்படுத்தும் வகையில் கடற்றொழில் நவீனமயமாக்கல் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மீனவ கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்றது.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.
















