பிராந்திய வளர்ச்சி மற்றும் இரு நாட்டு மக்கள் பலனடைய இந்தியா – மாலைதீவு இடையே வலுவான உறவு அவசியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
மாலத்தீவு தலைநகர் மாலேயில் ஜனாதிபதி முகமது மூயிஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முகமது மூயிஸை சந்தித்ததை கௌரவமாக கருதுவதாக எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தை அவருக்கு பகிர்ந்துக் கொண்டதாகவும் இரு நாட்டு மக்களின் நலன் மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு இரு நாடுகளிடையே வலுவான உறவு அவசியம் எனவும் இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாலைத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சர் காசன் மைமூனை சந்தித்த ஜெய்சங்கர், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.