மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக 750 மில்லி லீற்றருக்கு அதிகமான மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 ரூபா முதல் 1000 ரூபாவினாலும் 175 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் என செய்திகள் பரவின.
இந்நிலையில், இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், விசேட மதுபானத்தின் விலையை குறைக்குமாறு அண்மையில் விடுத்த கோரிக்கையை மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்ததாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மதுபானத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அது தொடர்பான மது வரியை குறைப்பதன் மூலமே முடியும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜே.குணசிறி மேலும் தெரிவித்துள்ளார்.