தற்போது முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார தொிவித்துள்ளாா்.
எதிா்க்கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சியதில்லை. எமது கட்சி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் தீர்மானமிக்கதாகும். பிரதான வேட்பானர்கள் பலருக்கிடையில் போட்டி நிலவுகின்றது. அதேபோல் நடப்பு அரசாங்கத்தில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட இருவேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எத்தனை கிளைகளாக பிரிந்து வேட்பாளர்கள் முன்னிலையான போதிலும் தற்போது முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 75 லட்சம் வாக்குகளை பெறுவார்.நாட்டு மக்கள் தேர்தலில் வெற்றிபெறுவது சஜித் பிரேமதாச என்பதை நன்கு அறிவார்கள்.
எனவே தேர்தலில் இரண்டாம் இடத்தினை வகிக்கப்போவது யார் என்பது தொடர்பாகவே மக்களின் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இரண்டாம் இடத்தை பெறுவோர் எதிர்த்தரப்பினராவர்.
நாட்bன் எதிர்க்கட்சி தொடர்பாகவே தற்போது கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்காக இன்று பொருளாதார கொள்ளையர்கள் மற்றும் கொள்ளையர்களை பாதுகாக்கும் தரப்பினர் கூட்டணி அமைத்துள்ளனர்” என மேலும் தொிவித்தாா்.