• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
ஆடியில் வரும் கடைசி வெள்ளி – மறக்காமல் இதை செய்ய வேண்டும்

Kavipriya S by Kavipriya S
2024/08/14
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆடி மாதம் ஆரம்பித்தலே வரிசையாக பண்டிகைகள், விசேஷங்கள், அம்மன் வழிபாடு, கோவிலில் விழாக்கள், கொண்டாட்டங்கள், ஆடிப் பெருக்கு, ஆடிக்கிருத்திகை என்று  தற்போது ஆடி மாதத்தின் இறுதி நாட்களில் இருக்கிறோம்.

இதுநாள் வரை ஆடி மாதத்தில் சிறப்பாக நீங்கள் எதுவும் செய்ய முடியவில்லை, வழிபாடு செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மற்றும் ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கடைசி வெள்ளியை மறந்து விடாதீர்கள்.

சுமங்கலி பூஜை:

ஆடி மாதத்தில் ஒரு சில விஷேச தினங்களும், திதிகளும் இருந்தாலும் ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதுவும் அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்தாலோ அல்லது திருமணமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற அளவு தாம்பூலம் கொடுத்தாலோ உங்கள் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை செய்வது அம்பாளை குளிர்விக்கும்.

ஒரு சில குடும்பங்களில் சுமங்கலி பூஜை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. சுமங்கலி பூஜைக்கென்றே பிரத்தியேகமாக விருந்து தயார் செய்வார்கள். ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.

உங்களுக்கு சுமங்கலி பூஜைக்கு தயார் செய்ய முடியவில்லை அல்லது விருந்துக்கு தயார் செய்ய முடியவில்லை அல்லது அந்த அளவுக்கு வசதி இல்லை என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெண்களை தாம்பூலம் வாங்குவதற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, இரண்டு வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து, தாம்பூலம் கொடுத்து, ஆசி பெறலாம்.

வசதி இருப்பவர்கள், தாம்பூலத்தில் கூடுதலாக, மருதாணி, தேங்காய், கண்ணாடி, சீப்பு, பழங்கள், ஜாக்கெட் துணி மற்றும் புடவை ஆகியவற்றை வைத்துக் கொடுக்கலாம். வீட்டுக்கு யாரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள், தவறாமல் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து, அம்மனுக்கு புடவை சாற்றலாம் அல்லது கோவிலில் உள்ள பெண்களுக்கு தாம்பூலம் வழங்கலாம்.

குத்து விளக்கு பூஜை:

பெரும்பாலான அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியன்று நாள் முழுவதும் வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதில், குத்து விளக்கு பூஜை நடைபெறும் அம்பாள் ஆலயத்தில் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

ஆடி வெள்ளி விரதம்:

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அம்மனின் அனுக்கிரகம் கட்டாயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. விரதமிருப்பவர்கள், காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி, தீபாராதனை செய்து ஏதேனும் ஒரு பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கலை நைவேத்யம் செய்ய வேண்டும். அதன் பிறகு மாலையிலும் அதேபோல விளக்கேற்றி, பின்னர் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.

வீடு சுபிட்சமாக, தடைகள், நோய்கள் நீங்க, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். அனைத்து விதமான தோஷங்களும், கண் திருஷ்டி உள்ளிட்ட எதிர்மறையான ஆற்றல் விலக, அபிராமி அந்தாதி பாடல்களை பாராயணம் செய்யலாம். கடன் மற்றும் வறுமை நீங்கி, செல்வம் தழைத்து வளர, கனக தாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.

Related

Tags: சுமங்கலி பூஜை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செஞ்சோலை படுகொலை: உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

Next Post

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

Related Posts

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
இலங்கை

2026-04-07
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…
இந்தியா

விசேட சலுகையுடன் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் உரை

மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் புதிய கார் விற்பனை 6 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் புதிய கார் விற்பனை 6 சதவீதம் அதிகரிப்பு!

2026-04-07
ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
Next Post
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

தேசிய காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு!

தேசிய காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

0
நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

0
லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.