இலங்கையின் பழமையான மற்றும் பிரமாண்டமான திருவிழாக்களில் ஒன்றான கண்டி எசல ரந்தோலி பெரஹெரா திருவிழா இன்று இரவு ஆரம்பமாகியுள்ளது.
கண்டி எசல ரந்தோலி பெரஹெரா ஒகஸ்ட் 19 வரை ஐந்து நாட்களுக்கு வீதிகளில் ஊர்வலமாகச் செல்லவுள்ளது.
கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா எசல பெரஹெரா வீதிகளில் ஊர்வலத்துடன் சனிக்கிழமை ஆரம்பமானது.
இந்த வருட கண்டி எசல பெரஹெராவில் 40 யானைகள் பங்கேற்க உள்ளதாக கண்டியின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.
இதேவேளை, பெரஹெரா காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்டி நகரில் 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 31ஆம் திகதி கெட்டம்பே மகாவலி ஆற்றில் நீர் வெட்டும் நிகழ்வைத் தொடர்ந்து கண்டி எசல திருவிழா நிறைவுபெறவுள்ளது.