இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பயணிக்க ரயில்கள் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு மாநிலத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலத்தை கட்டி முடிக்க 20 ஆண்டுகளுக்கும் மேலான காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாலம் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் ரயில் பயணமாக பக்கல் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பாலத்தின் கட்டுமானம் 2003 இல் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் பிராந்தியத்தின் நிலப்பரப்பு, பாதுகாப்பு வழக்குகளால் தாமதமானதாக கூறப்படுகிறது
இந்த பாலம் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதால், அதன் வடிவம் மற்றும் வளைவுகளை மாற்றி இந்திய ரயில்வே விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பாலம் மணிக்கு 266 கிமீ வேகத்தில் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்கும் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 40 கிலோ எடையுள்ள டிஎன்டி வெடிமருந்துகள் வெடித்தாலும் பாலம் தாங்கும் என்றும், பாலம் சேதமடைந்தாலும் அல்லது அதன் டவர் ஒன்று இடிந்து விழுந்தாலும், ரயில் குறைந்த வேகத்தில்தான் இயக்கப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.