“நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியே எமது திட்டமாகும்” என ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக வெற்றிபெறும். நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாகவுள்ளது.
நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியே எமது திட்டமாகும்.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியில் உள்ளனர். எனவே நாட்டில் ஆட்சிமாற்றமொன்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேர்தலின் உடாகவே அதனை ஏற்படுத்த முடியும்.எமது தேர்தல் பிரசார பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி தென்மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். காலி தங்காலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நாம் எமது தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டு மக்களை போலி பிரசாரங்கள் ஊடாக ஏமாற்ற முடியாது. ஏனெனில் மக்கள் அரசியல் நன்கு பாடம் கற்றுள்ளனர். எனவே நாட்டில் புதிய மாற்றமொன்றை ஏற்படுத்த மக்கள் காத்திருக்கின்றனர்.
எமது ஆட்சியில் நாம் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டே திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.வரிசுமையை குறைப்போம். வெற்றிகரமான கடன்மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை இன்று அனைவருக்கும் அறிந்திருப்பார்கள்.தேசிய மக்கள் சக்தியின் வெற்றியானது தேர்தலில் மக்களின் வெற்றியாகும்” இவ்வாறு அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.