கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றைய தினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக இந்த விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயம் பற்றி ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கை, சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும் என்பது என சுட்டிக்காட்டினார்.
யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது. இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ’முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிகின்றது. எடுக்கப்பட்ட தடயப்பொருட்களை…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து…
"கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டுமெனக் கோரி" முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது”இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துக” எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது. இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை…