ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கும்பலிடமிருந்த 6 குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி, மும்பை, ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.
கடத்தி வரப்படும் குழந்தைகள் 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு வைத்தியசாலைகளில் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது