தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், தன்னை கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை தலையில் அடித்த சம்பவம் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துவிட்டு கோபத்துடன் கிளம்பி சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.