பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி ஆயுதம் தாங்கிய தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் என்ற அமைப்பு போராடி வருவதோடு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைகளை குறி வைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பலுசிஸ்தானின் பிஷின் மாவட்டம் சுர்காப் சவுக் அருகே உள்ள முக்கிய சந்தைப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு அரசுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.