பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்ற இலங்கைக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் புதிய உத்வேகத்தை அளிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட தரப்பினர் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறிப்பாக ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அதன் சீர்திருத்தங்களுடன் கூடிய முன்னேற்றத்தில் நாடு
தொடர்ந்துதொடர்ந்து பயணிப்பதற்கு இந்த ஜனாதிபதி தேர்தல் சிறந்த வழியை ஏற்படுத்தும் என்றும் தூதுக்குழுவினர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.