வளர்ப்பு நாயின் கடிக்கு இலக்காயிருந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் முறையான சிகிச்சை பெறாத நிலையில் உயிரழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி நாய் கடிக்கு இலக்காகியிருந்த நிலையில் சுகயீனமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து யாழ், போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.