ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபாவாக உயர்த்துவேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
”அதற்கான சட்டங்களும் ஒழுங்குகளும் தயாரிக்கப்படும். அதேபோன்று ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஊழியர் சாசனமும் தயாரிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தனது கொள்கை அறிக்கையில் வலுவான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே சஜித் பிரேமதாச இந்த விடயத்தை வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது