முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் 43, 40, 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக துணுக்காய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.