காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கான்யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹமாஸ் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தில் சுமார் 20 கூடாரங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்குண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காஸாவில் சுமார் 40 ஆயிரத்து 900க்கும் அதிகமானவர்கள் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மேலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனபிரஜைகள் கான்யூனிஸ் நகருக்கு இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 251 பேர் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.