ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு மொத்தம் 203 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,916 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது