மொடன் சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு ஆட்டத்தில் ஒன்பது கோல்களை அடித்த முதல் அணியாக பேயர்ன் முனிச் ஆனது.
ஐரோப்பாவின் எலைட் கிளப் போட்டியின் புதிய வடிவம் செவ்வாயன்று (17) ஆரம்பமானது.
இதில் பட்டத்தை வைத்திருப்பவர்களான ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் ஆகியவையும் வெற்றி பெற்றன.
போட்டியில், ஹரி கேன் மூன்று பெனால்டிகள் உட்பட நான்கு கோல்களை அடித்தார்.
ஜேர்மனியின் அலையன்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணியானது குரோஷிய சாம்பியனான டினாமோ ஜாக்ரெப்பை 9-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
ஒரு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஒரு அணியால் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
2020 ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற 2019-20 UEFA சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போது, பேயர்ன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் எட்டு கோல்கள் அடித்த இறுதி அணியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.