ஜிபூட்டி (Djibouti) கடற் பகுதியில் இரண்டு புலம்பெயர்ந்த படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.
310 பேருடன் ஏமனில் இருந்து புறப்பட்ட படகுகள் செவ்வாய்கிழமை (02) கிழக்கு ஆபிரிக்க நாட்டிலிருந்து செங்கடலில் மூழ்கியதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
61 நபர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் தேடல் பணிகள் இடைவிடாமல் தொடர்கின்னறன என்று ஜிபூட்டியின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பயன்படுத்தும் உலகின் பரபரப்பான மற்றும் மிகவும் ஆபத்தான ஒன்றாக விவரிக்கப்படும் பாதையில் பதிவான அண்மைய படகு விபத்து சம்பவம் இதுவாகும்.