செவ்வாய் (02) இரவு ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஒரு குறிப்பிடத்தக்க பதிலடியை கொடுப்போம் என்று எச்சரித்துள்ளது.
எனினும், தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நேரம் எதுவும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், பெயரிடப்படாத இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி Axios செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியில்,
சாத்தியமான தாக்குதல் இலக்குகளில் ஒன்று ஈரானிய எண்ணெய் வசதிகள் ஆகும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு மீது தாக்குதல் நடத்துவதும் சாத்தியமாகும், அதேபோல் மூத்த பிரமுகர்களை குறிவைத்து படுகொலை செய்வதும் சாத்தியமாகும் – என்று கூறியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்றிரவு, “ஈரான் இன்றிரவு (நேற்றிரவு) ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டது, அதற்கு பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்தார்.
அதேநேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து அதன் பதிலை கொடுப்பதாகக் கூறினார்.
பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான மிகப்பெரிய ஆதாரங்களில் எண்ணெய் ஒன்றாகும்.
மேலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் OPEC குழுவில் மூன்றாவது பெரிய மசகு எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு ஈரான் ஆகும்.