பீஜிங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சீனா தனது உலகளாவிய இராணுவ தடயத்தை விரிவுபடுத்துவதை வெளிக்காட்டியுள்ளது.
பிபிசி செய்திச் சேவையால் சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், கம்போடியாவின் தாய்லாந்து வளைகுடா தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன கடற்படையின் A56 வகை 1,500 தொன் போர்க் கப்பல்களைக் காட்டுகின்றன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், கம்போடியாவின் ரீம் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சீனக் கடற்படை கப்பல்களை வெளிக்காட்டுகின்றது.
கடற்கரையில் உள்ள மற்ற சீனக் கட்டுமான வசதிகள் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கடற்படையால் பயன்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், அத்தகையக் கூற்றுக்கள் கம்போடிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன, அதன் அரசியலமைப்பு எந்தவொரு நிரந்தர வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தையும் சட்டவிரோதமாக்குகிறது என்று வலியுறுத்துகிறது.
சீனர்கள் எங்கள் சொந்த தேசிய பாதுகாப்பிற்காக ரீம் கடற்படை தளத்தை விரிவுபடுத்துவதற்கு எங்களுக்கு உதவி வழங்கினர்.
இந்த கடற்படைத் தளம் நிறைவடைந்ததும், மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு அல்லது கூட்டு இராணுவப் பயிற்சிக்காக எந்தவொரு கடற்படையும் அந்த துறைமுகத்தை அணுக முடியும் என்று கம்போடிய அரசாங்கம் கூறியுள்ளது.
எவ்வாறெனினும் வெளியாகியுள்ள இந்த படங்கள் தற்சமயம் சீனா மீதான அமெரிக்காவின் அச்சத்தையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது.