இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 75000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இத் திட்டத்தின் முதல் நிகழ்வாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இராணுவத் தலைமையக வளாகத்தில் ‘செஞ்சந்தன’ மரக்கன்று நடப்பட்டது.
இதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ விவசாயத் திட்ட காணியில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், இம்மரநடுகை திட்டத்திற்கு வளங்களை வழங்கிய வன பாதுகாப்பு திணைக்களத்தின் சமூக வனவியல் மற்றும் வனவியல் திட்ட அதிகாரி பாத்திமா அலுவிஹாரே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் மேம்பாட்டுப் பணிப்பாளர் சியாமினி பெரியப்பெரும, சூழல் ஆர்வலர் நெத்மி ஹிரண்ய கொலம்பவிதான மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் பங்குபற்றுதலுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது
அத்துடன் இராணுவப் பண்ணையான கொஹிலவகுரவத்த முகாம் வளாகத்தில் 15,000 கறுவா கன்றுகளும், இரணைமடு மற்றும் ஆண்டியாபுளியங்குள இராணுவப் பண்ணைகளில் 1500 டீஈஜேசி மாங்கன்றுகளும் நடப்பட்டன. அதற்கு மேலதிகமாக டீஜே லங்கா தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் இராணுவப் பண்ணைகளில் 15000 மரக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது