தற்போதைய அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிதி அதிகாரம் ஜனாதிபதியிடம் அல்ல. நாடாளுமன்றத்திடம் உள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது, அது எவ்வாறு செய்யப்பட வேண்டும், சரியானதா? அல்லது தவறானதா? எனக் கணக்கிடுவது அவசியம்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் நாடாளுமன்றத்திடம் உள்ளது.
எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதற்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் நாடு மீண்டும் அதள பாதாளத்திற்குச் செல்லும். முன்னைய அரசாங்கம் கடன் பெற்று, மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த பணம் முன்னனைய அரசாங்கத்தால் திருடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது.
அதேபோலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.