அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் தங்களின் தக்க வைப்பு வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு அணி உரிமையாளரும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்க வேண்டும் என்று பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
இதில், பெரும் ஊசலாட்டத்தை எதிர்கொண்டுள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தற்போது வரை விராட் கோலி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரை உறுதியான தக்கவைப்பு வீரர்களாக பெயரிட்டுள்ளனர்.
ஆனால் அணியின் சகல வீரர்களான க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் மற்றும் வில் ஜாக்ஸ் மீது அதிகம் கேள்விகள் உள்ளன.
இந்த நிலையில், ஆர்சிபி அணி, அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை தக்கவைக்க வாய்ப்பில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிந்திருக்கிறது.
அவர் ஆர்சிபிக்காக கடந்த 2024 சீசனில் மிகவும் குறைவான செயல் திறனை வெளிப்படுத்தினார்.
10 போட்டிகளில் வெறும் 129 ஓட்டங்களை மாத்திரம் எடுதிருந்தார்.
பந்து வீச்சிலும் வெறும் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
சீசனின் நடுவே மனநலத்தைக் காரணம் பின் வாங்கிய அவர், சில முக்கிய போட்டிகளில் பங்கெடுக்கவில்லை.
இந்த மோசமான செயல்திறன் காரணமாக ஆர்சி இப்போது மேக்ஸ்வெல்லை தக்க வைத்துக் கொள்ளாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
விராட் கோலி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் ஆர்சிபியைப் பொறுத்தவரையில் உறுதியாகத் தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வீரர்கள் ஆவர்.
அதேநேரம், அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனைத் தக்கவைத்துக் கொள்ள ஆர்சிபி உரிமை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் அவரது காயம் காரணமாக அவரது தக்க வைப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.
மேலும், உரிமையானது கிரீனை தக்க வைத்துக் கொள்ளவார்களா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கிரீன் காயம் அடைந்தார்.
கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் கூற்றுப்படி, கேமரூன் கிரீன் வரவிருக்கும் போர்டர்-கவாஸ்கர் டிராபியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் ஆறு மாத கிரிக்கெட் ஆட்டத்தை இழக்கவும் நேரிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சகலதுறை வீரர் எதிர்வரும் 2025 மார்ச் மாதத்துக்குள் உடல் தகுதியுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒவ்வொரு உரிமையாளரும் மொத்தம் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.