செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இயன்றவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று ஒரே ஒரு நெய் தீபத்தையாவது ஏற்றி வைத்து செவ்வரளி மலர்களை கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
அதேபோல் வீட்டிலும் முருகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து, நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யலாம்.
இவ்வாறு நாம் முருகனை முழு மனதோடு வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்குவதோடு நினைத்த காரியம் நினைத்தபடி நடை பெறும் என்பது ஐதீகம்.