2024 ஒக்டோபர் 24, அன்று பூமியைக் கடந்து செல்லும் ஆறு சிறுகோள்களை நாசா கண்டறிந்துள்ளது.
இதில் மிகப்பெரியது 580 அடி அகலம் கொண்ட சிறு கோள் ஆகும்.
இந்த சிறுகோள்கள் எதுவும் பூமிக்கு அச்சுறுத்தலாக இல்லை.
இந்த சிறுகோள்களில் பெரும்பாலானவை நிர்வாணக் கண்ணால் பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும், இதனை வானியலாளர்களின் தொலைநோக்கிகளை அடிப்படையாகக் கொண்டு கண்டறியலாம்.
2023 TW1 சிறுகோள் : இந்த சிறிய சிறுகோள் ஒரு காரின் அளவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது பூமியின் பாதுகாப்பு தூரத்திலிருந்து கடந்து செல்லும்.
2024 TP2 சிறுகோள் : இது 2023 TW1 ஐ விட சற்று பெரியது, இதுவும் பூமிக்கு பாதிப்பில்லாத வகையில் கடந்து செல்லும்.
2023 TX6 சிறுகோள் : இது பாதுகாப்பான தூரத்தில் இருந்து பூமியை அண்மித்த வகையில் கடந்து செல்லும்.
2023 UW2 சிறுகோள்: இந்த சிறுகோள் பட்டியலில் உள்ள ஏனையவற்றை விட பெரியதாகும், பூமிக்கு நெருக்கமான வகையில் கடந்து செல்லும்.
2023 UM2 சிறுகோள்: 2023 UW2 அளவைப் இந்த சிறுகோள் நமது கிரகத்தையும் கடந்து செல்லும்.
2023 UN1 சிறுகோள்: பட்டியலில் உள்ள மிகச்சிறிய சிறுகோளாகும். இது நடது கிரத்திலிருந்து தொலை தூரத்தில் கடந்து செல்லும்.