இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அனைத்து பத்து உரிமையாளர்களிடமிருந்தும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இது நவம்பர் இறுதி வாரத்தில் திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். 2025 மெகா ஏலத்திற்கு ஒரு முக்கியமான படியாகும்.
ஹென்ரிச் கிளாசன் 2025 ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு தக்க வைக்கப்படடுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணி தென்னாப்பிரிக்க வீரரை 23 கோடி இந்திய ரூபாவுக்கு தக்க வைத்துக் கொண்டது.
அவரைத் தொடர்ந்து ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் விராட் கோஹ்லியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் நிக்கோலஸ் பூரனும் மிகவும் விலையுயர்ந்த தக்கவைப்பு பட்டியலில் இருந்தனர்.
அவர்கள் இருவரும் தலா 21 கோடி இந்திய ரூபாவுக்கு தக்க வைக்கப்பட்டனர்.
அணி உரிமைகளால் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் விபரம்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
ருதுராஜ் கெய்க்வாட் ( ₹18 கோடி)
ரவீந்திர ஜடேஜா (₹18 கோடி)
மதீஷ பத்திரன (₹13 கோடி)
சிவம் டூபே (₹12 கோடி)
எம்.எஸ். தோனி (₹4 கோடி)
2. டெல்லி கேபிட்டல்ஸ் (DC)
அக்ஸர் படேல் (₹16.50 கோடி)
குல்தீப் யாதவ் (₹13.25 கோடி)
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (₹10 கோடி)
அபிஷேக் போரல் (₹4 கோடி)
3. குஜராத் டைட்டன்ஸ் (GT)
ரஷித் கான் (₹18 கோடி)
சுப்மன் கில் (₹16.5 கோடி)
சாய் சுதர்ஷன் (₹8.50 கோடி)
ராகுல் திவாட்டியா (₹4 கோடி )
சாருக் கான் (₹4 கோடி)
4. ராஜஸ்தான் ரோயல் (RR)
சஞ்சு சாம்சன் (₹18 கோடி)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (₹18 கோடி)
ரியான் பராக் (₹14 கோடி)
துருவ் ஜூரல் (₹14 கோடி)
சிம்ரன் ஹெட்மயர் (₹11 கோடி)
சந்தீப் ஷர்மா (₹4 கோடி)
5. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
ஹென்ரிச் கிளாசென் (₹23 கோடி)
பேட் கம்மின்ஸ் (₹18 கோடி)
அபிஷேக் ஷர்மா (₹14 கோடி)
டிரவிஸ் ஹெட் (₹14 கோடி)
நிதிஷ் குமார் ரெட்டி (₹6 கோடி)
6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரிங்கு சிங் (₹13 கோடி)
வருண் சக்கரவர்த்தி (₹12 கோடி)
சுனில் நரேன் (₹12 கோடி)
ஆண்ட்ரே ரஸ்ஸல் (₹12 கோடி)
ஹர்ஷித் ராணா (₹4 கோடி)
ரமன்தீப் சிங் (₹4 கோடி)
7. மும்பை இந்தியன்ஸ் (MI)
ஜஸ்பிரித் பும்ரா (₹18 கோடி)
சூர்யகுமார் யாதவ் (₹16.35 கோடி)
ஹர்த்திக் பாண்டியா (₹16.35 கோடி)
ரோஹித் ஷர்மா (₹16.30 கோடி)
திலக் வர்மா (₹8 கோடி)
8. பஞ்சாப் கிங்ஸ் (PK)
ஷஷாங்க் சிங் (₹5.5 கோடி)
பிரப்சிம்ரன் சிங் (₹4 கோடி)
9. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
விராட் கோலி (₹21 கோடி)
ரஜத் படிதார் (₹11 கோடி)
யாஷ் தயாள் (₹5 கோடி)
10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
நிகோலஷ் பூரன் (₹21 கோடி)
ரவி பிஷ்னோஷ் (₹11 கோடி)
மயங்க் யாதவ் (₹11 கோடி)
ஆயுஷ் படோனி (₹4 கோடி)
மொஹ்சின் கான் (₹4 கோடி)