மணிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை, உயிர் இழப்புகள், பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்த நிலையில், தற்போது இவ்வழக்குகள் மணிப்பூர் பொலிஸ்சாரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் முகாமில் தங்கி இருந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர் .
இதில் குகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் இந்த வன்முறையில் ஈடுபட்டனர். இன்னிலையில் இந்த கொலைகள் குறித்தும், வன்முறையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது