நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மொத்தமாக 4இலட்சத்து 79 ஆயிரத்து 871 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் 3,114 குடும்பங்களைச் சேர்ந்த 10, 204 பேர் தற்போது, 99 இடைத்தங்கல் முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மோசமான வானிலை காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை பதுளை, கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 09 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.