கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
காற்று:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது திசையில் மாறுபடும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. ஆக காணப்படும்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமானதாக காணப்படும்.