குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு (Renuka Perera) கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை கொட்டிகாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பெற்றதன் பின்னர் ரேணுகா பெரேராவை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.