தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரியே குறித்த விவசாயிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதாக
விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














