மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிசார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேரைக் கைது செய்துள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது