அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் இந் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் சிறிது நேரத்தில் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.