மைனே விமான நிலையத்திலிருந்து எட்டு பேருடன் புறப்பட்டபோது ஒரு தனியார் ஜெட் தீப்பிடித்து எரிந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும் விமானத்தில் பயணித்தவர்களின் கதி மற்றும் அடையாளங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7:45 மணியளவில் பாங்கூர் சர்வதேச விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான பாங்கூர் உட்பட, மைனேயின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













