பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் 350இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, காணாமல் போனவர்களில் 316 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகில் 332 பயணிகளும் 27 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 28 பேரை இன்னும் காணவில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சரக்கு மற்றும் பயணிகள் படகு இரண்டையும் கொண்ட இந்தக் கப்பல், நாட்டின் தெற்கு நிலப்பகுதியான மின்டானாவோவிலிருந்து தென்மேற்கே ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை (ஞாயிற்றுக்கிழமை 17:50 GMT) மதியம் 1:50 மணிக்கு கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.















