இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது.
கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி வெளியான இத் திரைப்படம் உலகம் முழுவதும் ஏழே நாட்களில் ஆயிரம் கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான (1032 கோடி) வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது வாரத்தின் இறுதியில் வசூல் சூடுபிடிக்கும் என தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
எனினும், புஷ்பா 2 திரைப்படம் தீபிகா படுகோன்-அமிதாப் பச்சன்-பிரபாஸ்-நடித்த கல்கி 2898 AD திரைப்படத்தின் வசூலை விட சற்று வின் தங்கியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான கல்கி 2898 AD திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலானது 1,200 கோடி இந்திய ரூபாவை எட்டியிருந்தது.
புஷ்பா 2: தி ரூல் மற்றும் கல்கி 2898 AD ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களுமே இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடியை தாண்டிய படங்களாகும்.