சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் ‘கூலி’ திரைப்படம் தொடர்பான அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சற்றுமுன் ‘கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு விருந்து காத்திருக்கிறது என அறிவித்துள்ளது.
இது குறித்த நான்கு நொடி வீடியோவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/sunpictures/status/1867105160817938590