ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் பாராளுமன்றில் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்றின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த வாரம் நாடாளுமன்றில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்க்கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.