அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான விதிக்கப்படும் அதே தண்டனையை எதிர்கொள்வார்கள்.
கடுமையான தண்டனை விதிகள், “இளம் குற்றவாளிகளால் செய்யப்படும் குற்றங்கள் மீதான சமூகத்தின் சீற்றத்திற்கு” பதிலளிக்கும் வகையில் அமைவதாகவும், அது குற்றங்கள் மேலும் தடுப்பதை கட்டுப்படுத்தும் என்றும் குயின்ஸ்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும் பல ஆய்வாளர்கள், கடுமையான இந்த தண்டனைகள் சிறுவர்களின் குற்றத்தை குறைக்காது, உண்மையில் அதை அதிகப்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையும், சட்டங்கள் சிறுவர்களின் மனித உரிமைகள் தொடர்பான மரபுகளை புறக்கணிப்பதாகவும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் கூறி சீர்திருத்தங்களை விமர்சித்துள்ளது.
கடந்த ஒக்டோபரில் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் நேஷனல் கட்சி (LNP) கொண்டு வந்த இந்த சட்டமூலமானது வியாழக்கிழமை (12) குயின்ஸ்லாந்து மாநில நாடளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.