பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ‘வணங்கான்‘ திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளதுடன், முக்கிய கதாபாதிரத்தில் இயக்குனர் மிஸ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அத்துடன் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளதுடன் பின்னணி இசையை சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடை பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விழாவில் பாலாவின் 25 வருட திரையுலகப் பயணத்தை கொண்டாடும் விதமாக அவர் கௌரவிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.