சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (18) அறிவித்தார்.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அஸ்வின் ஓய்வினை அறிவித்தார்.
38 வயதான அஸ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் 156 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 537 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
துடுப்பாட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்களுடன் 3,503 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 700 விக்கெட்டுகளை குவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் அஷ்வின் ஆவார்.
அதேநேரத்தில், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
முதல் இடத்தில் 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே உள்ளார்.
இதனிடையே அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது சமனிலையில் முடிந்துள்ளது.
தொடரின் நான்காவது போட்டி, மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.