கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் `டிங்கா டிங்கா‘ (Dinga Dinga)என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருவதாகவும், இது பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் என்பன இந்த நோய்த் தொன்றின் அறிகுறிகளாகும் எனவும், இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் ஒருவார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும் புண்டி புக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.