ஜனவரியில் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கவுள்ள டெனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாக ஞாயிற்றுக்கிழமை (22) கூறினார்.
சமூக தளத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ள குடியரசுக் கட்சியின் தலைவர்,
உலகம் முழுவதும் தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமை மற்றும் கட்டுப்பாடு ஒரு முழுமையான தேவை என்று அமெரிக்கா உணர்கிறது – என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்து தன்னாட்சி சுயாட்சியைக் கொண்டிருக்கும்போது, அது இன்னும் டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
78 வயதான ட்ரம்ப், பேபால் இணை நிறுவனர் கென் ஹோவரியை டென்மார்க்கிற்கான அமெரிக்கத் தூதராக அறிவிக்கும் போதே இந்த அறிக்கையை வெளியிட்டார்.
கீரின்லாந்து மீதான ட்ரம்ப்பின் ஆர்வம் புதிதான விடயமல்ல.
கடந்த 2017 முதல் 2021 வரையிலான அவரது முதல் ஜனாதிபதி காலத்தில், கிரின்லாந்து பிரதேசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.
கிரின்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் புவிசார் அரசியல் பொருத்தத்திற்கு ஈர்க்கப்பட்ட ட்ரம்ப், 2019 ஆம் ஆண்டில், ட்ரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், அவரது ஆசை, டென்மார்க்கில் உள்ள தலைவர்களிடமிருந்து கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
கிரீன்லாந்து வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, ஒரு கண்டம் இல்லாத உலகின் மிகப்பெரிய தீவாகும்.
அதன் மூலோபாய இருப்பிடத்தைப் பொறுத்தவரை, இது ஆர்க்டிக்கிற்கு அருகில் உள்ளது மற்றும் ரஷ்யா உட்பட சில நாடுகள் பிரதேசத்தின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்றன.
கிரீன்லாந்து வட அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், புவிசார் அரசியல் ரீதியாக, அது ஐரோப்பாவுடன் உறவுகளைக் கொண்டுள்ளது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பனாமா கால்வாயின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை (22) அச்சுறுத்திய பின்னர் கிரீன்லாந்து குறித்த ட்ரம்பின் கருத்துக்கள் வந்துள்ளன.
பனாமா முக்கியமான வர்த்தகப் பாதையைப் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டிய ட்ரம்ப், அதன் மீதான சாத்தியமான சீனச் செல்வாக்கையும் எச்சரித்தார்.
1914 ஆம் ஆண்டு கால்வாயின் கட்டுமானப் பணிகளை அமெரிக்கா முடித்து 1999 டிசம்பர் 31 வரை நிர்வகித்தது.
1997 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கால்வாயின் கட்டுப்பாடு அதிகாரபூர்வமாக இறையாண்மை கொண்ட பனாமாவிடம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.